முகப்பு


011. ஆவியை அனுப்பும் என் ஆண்டவரே
ஆவியை அனுப்பும் என் ஆண்டவரே
அகிலமெல்லாம் பெறும் புது உயிரை - 2

1. நெஞ்சே வாழ்த்து உன் ஆண்டவரை
எத்துணை உயர்ந்தவர் இறைவா நீர் – 2
மாண்பு மகத்துவம் உமக் கணியாய்
வண்ணப் போர்வையாய் ஒளியைக் கொண்டீர்

2. அவனியை அடித்தளத்தில் அமைத்தீர்
அது எந்நாளுமே அசையாது – 2
கடல்களை அதற்கு உடையாய்த் தந்தீர்
கல்மலையை நீர்ப் பெருக்கால் மூடச் செய்தீர்