முகப்பு


019. உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்
உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்
பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமையா - 2

1. உலர்ந்து போன எலும்புகளாய் உலரப்பட்ட எங்களிலே – 2
உயிர்தரும் ஆவியைத் தந்து வீரசேனையாய் மாற்றிடுமே - 2

2. வாக்களித்த வல்லமையைப் பெந்தகோஸ்தே நாளினிலே - 2
பொழிந்த இறைவா எங்களிலும் நிரம்பி வழியச் செய்தருளும் - 2

3. அடிமை விலங்குகள் தகர்ந்திடவே அக்கினி ஆவியை ஈந்திடுமே - 2
தடைகளும் களைகளும் எரிந்திடவே மீட்பின் ஆவியை ஊற்றிடுமே - 2