முகப்பு


020.ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா - 2
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே - 2
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே – 2
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் – 2
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - 2

2. ஜீவ தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே - 2
கனிதந்திட நான் செழித்தோங்கிட - 2
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம்பெற்றிட - 2

3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடவே - 2
ஆத்ம பாரமும் பரிசுத்தமும் - 2
ஆவலுடன் பெற்றிட வரம் தாருமே - 2