முகப்பு


021. எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமய்யா
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே -2

1. எப்படி நான் செபிக்க வேண்டும் எதற்காக செபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே - 2
வேதவசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே - 2

2. கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்
கற்றுத் தாரும் ஆவியானவரே - 2
செய்த நன்மை நினைக்கவும் நன்றியோடு துதிக்கவும்
சொல்லித் தாரும் ஆவியானவரே - 2