முகப்பு


025. கடவுள் ஆவியானவர்
கடவுள் ஆவியானவர்
ஆவியிலும் உண்மையிலும் அவரைத் தொழுவோம் - 2
ஆண்டவர்க்குப் புகழ் என்றும் பாடுவோம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய்ப் பாடுவோம் - 2

1. ஆவியான கடவுள் எங்கும் உள்ளார்
ஆலயத்தில் எழுவது நம்மில் வரவே - 2
ஆலயமாய் நம் உடலை மாற்றுவோம்
ஆண்டவரை எங்கும் சுமந்து செல்வோம் ஆண்டவர்க்கு

2. உறுதி தரும் ஆவி நம்மில் மலரும்
தூய உள்ளம் நம்மில் உருவாகும் - 2
அருங்கொடைகள் யாவும் நம்மில் நிரம்பும்
ஆண்டவரின் சாட்சியாக வாழ்வோம் ஆண்டவர்க்கு