முகப்பு


028. தூய ஆவியே துணையாக வருவீர்
தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் - 2

1. மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர் - 2
மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர்

2. மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர் - 2
மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர்

3. தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர் - 2
தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர்

4. பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர் - 2
பாவக் கறை கழுவித் தூய்மை தர வருவீர்