043. அழகழகான அன்புச் செயலால்
அழகழகான அன்புச் செயலால்
அகிலம் வியக்கும் அன்பர்களே - 2
நம் அன்றாட வாழ்வைக் கொண்டாடி மகிழ
மன்றாட வருகையின் நேரமதில் - 2
வருக வருகவே வளங்கள் பெறுகவே வாழ்வின் பலியிலே
எழுக எழுகவே ஏக்கம் போக்கவே இயேசுவின் வழியிலே
1. கடவுளின் அன்பு பிள்ளைகள் நாம் கனவும் மறவோம் நம் வாழ்வில்
உடன் உள்ள யாவரும் நம் உறவே
உயிர் உள்ள வரையில் இதை நினைப்போம் – 2
வாழ்வெனும் தேடலில் நல்லன செய்கையில்
வாழ்விக்கும் இறைவனும் நம்முடன் இணைகிறார் - 3 வருக
2. சாதியும் சமயமும் நமக்கில்லை சமத்துவம் ஒன்றே நம் கொள்கை
நீதியும் நேயமும் நெஞ்சினிலே நிதமும் சுமந்தே சுடராவோம் - 2
வீழ்ந்திடும் மனிதத்தைத் தாங்கிடும் பணிகளில்
விடுவிக்கும் சக்தியாய் இறைவனும் எழுகிறார் - 3 அழகழகான