044. அழகிய நாளிது ஆனந்த நாளிது இனிமை தரும் நாளிது
அழகிய நாளிது ஆனந்த நாளிது இனிமை தரும் நாளிது
இறைவன் நம்மை அழைக்கின்றார்
அருளை நம்மில் பொழிந்திடவே - 2
எழுவோம் இணைவோம் புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம்
1. அன்பிலே நம்மை அரவணைப்பார் வாருங்கள்
அருளிலே நம்மை நனைத்திடுவார் கூடுங்கள்
இறையன்பு குறையாதது பிறரன்பு மேலானது – 2
அவர் வழியிலே நாம் வாழுவோம் அவர் பலியிலே நாம் பகிருவோம்
புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம் - 2
2. பணிவுடன் பணிசெய்ய அழைக்கின்றார் வாருங்கள்
பரிவுடன் பகிர்ந்திட அழைக்கின்றார் கூடுங்கள்
இறைவார்த்தை உணவானது இறையாட்சி நடந்தேறுது - 2
புதுப் பாதைகள் நாம் தேடுவோம் பிறர் வாழ்வினை நாம் பேணுவோம்
புதிய வாழ்வினைத் தொடர்ந்திடுவோம்