முகப்பு


049. அழைக்கும் இறைவன் குரல் கேட்போம்
அழைக்கும் இறைவன் குரல் கேட்போம்
ஆர்வமாய் ஒன்றிணைவோம் அன்பாய் இயேசு அழைக்கிறார்
அவர் வார்த்தை கேட்டிடவும் அவர் பாதை சென்றிடவும்
இனிதாய் இறைவன் அழைக்கிறார்
அவர் குரல் கேட்போம் அவர் வழி செல்வோம் - 2
இறைவன் ஆட்சி மலர்ந்திடும் அருளால் பூமி நிறைந்திடும்

1. அவர்வழி நாமும் செல்வதால் அன்பு பூக்கள் உலகில் மலர்ந்திடும்
அவர்மொழி நாமும் கேட்பதால்
வாழ்வின் பாதை நமக்குத் தெரிந்திடும்
அருளும் ஆசியும் துணையாகிடும்
அமைதி வாழ்விலே நிலையாகிடும்
அவர்காட்டும் பாதை தினமும் சென்று அவராக வாழுவோம்

2. உறவிலே நாமும் வாழ்வதால் உள்ளங்கள் ஒன்றாகிடும்
நீதியில் வாழ்வு அமைவதால் சாதிபேதம் அழிந்து ஒழிந்திடும்
உயர்வுதாழ்வுகள் சமமாகிடும் உலகம் ஓர் குலம் என்றாகிடும்
அவர் வார்த்தை கேட்டு வாழ்வதனால் புதுவாழ்வு பிறந்திடும்