முகப்பு


051. அழைப்பது இறைவன் குரல் ஆனந்தமாய்க் கூடுவோம்
அழைப்பது இறைவன் குரல் ஆனந்தமாய்க் கூடுவோம்
அவர்புகழ் பாடிப்பாடி நன்றியோடு போற்றுவோம்
அன்பு கொண்ட நெஞ்சமாகுவோம் - அவர்
அருளோடு நாம் வாழுவோம் - 2

1. வாழ்வும் வழியும் நானே வாழ்வுக்கு உணவும் நானே
உயிரும் உயிர்ப்பும் நானே உண்மையின் ஆயன் நானே - 2
என்றே அழைக்கிறார் ஏக்கமாய் இருக்கிறார் – 2
உண்மை தேவன் உறவில் வாழ புதிய வாழ்வில் மகிழ்வு காண

2. உள்ளம் கலங்கிடாதே உனக்குள் அமைதி நானே
அன்பில் நிறைய வைப்பேன் அருளினில் மகிழ வைப்பேன் - 2
என்றே அழைக்கிறார் ஏக்கமாய் இருக்கிறார் - 2
உண்மை தேவன் உறவில் வாழ புதிய வாழ்வில் மகிழ்வு காண