முகப்பு


053. அற்புத அன்பனின் அடி தொழவே
அற்புத அன்பனின் அடி தொழவே
அவரின் பாதம் அணி திரள்வோம்
இத்தனை இகம் வாழ் உயிர்களுமே இயேசுவை வணங்கிடுமே -2

1. ஆலய மணியின் ஓசையைக் கேட்போம்
ஆயனே நம்மைக் கூப்பிடக் கேட்போம் - 2
ஆவியின் அருளால் அறவழி நடப்போம்
அவரின் வார்த்தையை வாழ்வினில் ஏற்போம் - 2
அன்பினில் இணைவோம் அருளில் நிலைப்போம்
ஆனந்தமாய் வாழ்வோம் நாம் – 2

2. ஆலயக் கதவு திறந்திடப் பார்த்தோம்
ஆண்டவர் சந்நிதி வணங்கியே நின்றோம் - 2
அன்புக் கரங்கள் கூப்பியே தொழுவோம்
அவரின் அருளால் ஆறுதல் அடைவோம் - 2 அன்பினில்