முகப்பு


057. அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம்
அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம்
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம்

1. வார்த்தை வழியிலே வாழச் சொல்வதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
நன்மை நெறியிலே நம்மைப் பகிரவும்
நாளும் நமக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
இறைவனே தம்மையே - 2 மனிதருக்களிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே

2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும்
இந்தப்பலி இறையின்பலி இணையில்லாத பலிதான் – 2
மன்னிக்கும் மனத்திலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும்
இந்தப்பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
அப்பமும் இரசமுமே - 2 இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நம்மை மறை உடலாக்கும்