முகப்பு


062. ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம்
ஆண்டவர் இல்லம் ஆனந்த வெள்ளம்
வாராய் திருக்குலமே - 2
நம் வேண்டுதல் எல்லாம் கேட்டிட அழைத்தார்
இனி எல்லாம் நலமே - 2
இறையாசீர் பெற்றோரே வாருங்கள் - அவர்
அருள்மொழி கேளுங்கள் - 2

1. உங்கள் உள்ளங்களில் அமைதி மலர்க
உங்கள் இல்லங்களில் சமாதானம் பெருக - 2
நீங்கள் யாவரும் நல்வாழ்வு பெறுக - 2
உறவுகள் வளம் பெறுக - உங்கள்
உறவுகள் வளம் பெறுக - இறையாசீர்

2. நமது ஆண்டவரின் ஆலயம் செல்வோம்
வாசல் நமக்காகத் திறந்துள்ளதே - 2
அவரின் வார்த்தைகள் நல்வாழ்வுக் கனிகள் - 2
வாழ்வோர் பேறுபெற்றோர் - அதில்
வாழ்வோர் பேறுபெற்றோர் - இறையாசீர்