முகப்பு


068. ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
அன்பினாலே நம்மையே பலியாக்குவோம் - 2
ஒன்றிணைந்து செல்லுவோம் ஓர் குலமாய் மாறுவோம்
ஒன்றே தேவன் என்னும் உண்மை உலகம் காணச் செல்லுவோம்

1. இறைமகன் தன்னையே பலிப்பொருளாய்த் தந்திடும்
திருப்பலியில் பக்தியாய்ப் பங்குபெறச் செல்லுவோம் - 2
நமது இயேசு கரங்களில் நம்மை முற்றும் தந்திட – 2
இறைவன் வாழும் இல்லமாம் ஆலயம் செல்லுவோம் - 2
ஒன்றிணைந்து செல்லுவோம்...

2. நமது பாவம் போக்கிட நோய்களும் நீங்கிட
தன்னையே தானமாய்த் தலைவன் இயேசு தந்தாரே
அவரின் தியாகப் பாதையில் நம்மைப் பலியாய் தந்திட - 2
அனைவருமே வாருங்கள் அன்புடனே செல்லுவோம் - 2