069.ஆண்டவரின் இல்லம் தேடி வருகிறோம்
ஆண்டவரின் இல்லம் தேடி வருகிறோம்
ஆனந்தமாய் இறைமனிதம் ஆகிறோம் - 2
தாயின் கருவில் நம்மைத் தேர்ந்த தெய்வம் அழைக்கிறார் - 2
அவரில் ஒரு குடும்பமாகக் கூடுவோம்
வருக வருக அன்பிலே எழுக எழுக அருகிலே
கொஞ்சி வாழும் உள்ள உணர்விலே ஒன்று கலந்திடவே
1. இணைந்து வாழும் மனிதர் நடுவில் இறைவன் எழுகிறார்
இதயம் ஒன்று வேண்டும் போது அருளைப் பொழிகிறார் - 2
இகம் வாழ்ந்திடும் உயிருக்கெல்லாம் அருளைப் பொதுமையாக்குவோம்
இனிமையான பணிகளாலே உலகைப் புதியதாக்குவோம்
இறைவன் ஆட்சி மலர வேண்டும் மண்ணிலே
இதயம் சேர்ந்து இனிய குடும்பமாகவே - 2 வருக வருக
2. சிதறிவாழும் மனிதர் சேர கரங்கள் விரிக்கிறார்
சிதைந்துபோகும் மனிதம் மீட்க உயிரைத் தருகிறார் - 2
உறவு தாகம் கொண்ட அவரின் உள்ளம் கொண்டு வாழுவோம்
உருவில்லாத அவரை மனித உறவுகளில் காணுவோம்