முகப்பு


072.ஆண்டவரே உமது இல்லம் ஆலயம் வருகின்றோம்
ஆண்டவரே உமது இல்லம் ஆலயம் வருகின்றோம்
மாண்புடையோன் வல்லமையோன்
புகழ்மிகு பாடல்கள் பாடுகின்றோம்

1. வானணிகள் திகழ் பேரணியாம் - வந்து
வாழ்த்தொலி முழங்கிடும் ஆனந்தமாய்
வானளவாய் நிற்கும் கோபுரங்கள் - உந்தன்
மாட்சிமை காட்டிடும் சாட்சிகளாய்
வானவர் போல் கூட நாம் வான்புகழைப் பாட
வணங்கிடுவோம் இறைவனையே
வாழ்விலும் தாழ்விலும் நாம் மறவோம்

2. வார்த்தை என்னும் பயிர் விளைநிலமாம் - அருள்
வார்த்திடும் நீர்நிலை இதுவேயாம்
வாருங்கள் அறுவடை செய்குவோம் - நம்
வாழ்வுக்கு உணவாய் உண்டிடுவோம்
வார்த்தையில் வாழ்ந்திடுவோம்
அருள்வாக்கில் நிலைத்திடுவோம் - வணங்கிடுவோம்