முகப்பு


073. ஆதவன் எழுகையிலே மணி ஓசையை நான் கேட்டேன்
ஆதவன் எழுகையிலே மணி ஓசையை நான் கேட்டேன்
ஆண்டவா உனைத் தொழவே உன் ஆலயம் தேடி வந்தேன்

1. உன் பாதம் அமர விழைகின்றேன்
உன் அருள் பெறவே துடிக்கின்றேன் - 2
கருணையின் உருவே என் இறைவா
வரம் பல எமக்கே நீ அருள்வாய் - 2
சுதனே உனையே போற்றிப் பாட

2. உன் துணை நாடி வருகின்றேன்
என்னகம் குளிர விழைகின்றேன் - 2
எளியவன் எனதுள்ளம் வா இறைவா
ஏழை உன் மகனைக் காத்திடுவாய் - 2
வாழ்வில் உனையே போற்றிப் பாட