முகப்பு


102.இயேசுவின் தோழர்களே இயேசுவின் தோழிகளே
இயேசுவின் தோழர்களே இயேசுவின் தோழிகளே
ஒன்றாய் வாருங்கள்
விடுதலை வீரர்களே கரங்களைச் சேர்த்து மனங்களை இணைத்து
ஒன்றாயக் கூடுங்கள்

1. புதியதோர் உலகம் புவியினில் அமைய ஒன்றாய்க் கூடுங்கள்
நீதியின் ஒளியில் அன்பின் வழியில் இணைந்தே வாருங்கள்
விடுதலை வாழ்வையே, எங்கும் காணவே-2
தலைவன் இயேசுவின் வழியில் தொடர்ந்து சரித்திரம் படைக்கவே
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு (முழங்கு) - 2

2. இறைவனின் அரசு இகமதில் வeர ஒன்றாய்க் கூடுங்கள்
இயேசுவின் அன்பை இதயத்தில் ஏந்தி இணைந்தே வாருங்கள்
அன்பின் ஆட்சியே அகிலம் காணவே - 2
உண்மை ஒளியில் தோழமை உணர்வில் சமத்துவம் படைக்கவே
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு (முழங்கு) - 2