முகப்பு


104.இயேசுவின் வழியில் ஓரணியாக இயங்கிட
இயேசுவின் வழியில் ஓரணியாக இயங்கிட
அனைவரும் கூடிடுவோம்
கறைகளைக் கழுவி நிறைவினை அளிக்கும்
கல்வாரி பலியினில் கலந்திடுவோம்
வருவோம் வருவோம் ஆலயமே
தருவோம் தருவோம் நம் மனமே - 2

1. மதங்களில் புதைந்து மனிதத்தை மறந்தோம் மாறி வருகின்றோம்
உள்ளங்கள் தெளிந்து உறவினைப் புரிந்து
உன்னில்லம் வருகின்றோம் - 2
கண் போல எம்மைக் காண்கின்ற தேவா
அன்போடு நாளும் அணைக்கின்ற நாதா
அலையெனத் திரண்டு ஓடோடி வந்தோம் - வருவோம்

2. கனவினில் மிதந்து கடமைகள் மறந்தோம் மாறி வருகின்றோம்
சுயநலம் கடந்து சமத்துவ உலகில் சுடர்விட வருகின்றோம் - 2
மண் வாழும் மாந்தர் உன் போல வாழ
எம் ஆவல் ஆற்றல் எல்லாமும் சேர்ந்து
உன் வாசல் வந்தோம் எம் வாழ்வைத் தந்தோம்