முகப்பு


103. இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே
இறைகுலமே திருக்குலமே தன்மான தமிழ்க்குலமே
இறைவன் நம்மை அழைக்கிறார் வாருங்கள்
ஏழையரே இனியவரே சுமைதாங்கி சோர்ந்தவரே
இறைவன் இன்று உரைப்பதைக் கேளுங்கள்
புதிய உலகம் படைத்திட புது சமூகமாய் மாறிட
புதிய வாழ்வில் ஒன்று கூடுவோம் - 2

1. அன்பின் பாலமாகவே இறைவன் அழைக்கின்றார்
இனிய உறவை வளர்க்கவே இறைவன் அழைக்கின்றார்
வாருங்கள் வாருங்கள் அன்பின் பாலமாகவே
கூடுங்கள் கூடுங்கள் இனிய உறவை வளர்க்கவே
புதிய விடியல் தேடியே விரைந்து செல்லுவோம்
உறவைப் பகிர்ந்து வாழவே ஒன்று கூடுவோம்

2. தோழமையில் இணையவே இறைவன் அழைக்கின்றார்
தொண்டு வாழ்வைத் தொடரவே இறைவன் அழைக்கின்றார்
வாருங்கள் வாருங்கள் தோழமையில் இணையவே - கூடுங்கள்