முகப்பு


108. இறைமக்களே கூடி வாருங்கள் - உங்கள்
இறைமக்களே கூடி வாருங்கள் - உங்கள்
இருகரம் கூப்பி வாருங்கள் - 2
உறுதியான நம்பிக்கையில் இறையிடம் வரம் கேளுங்கள்
கேட்டதெல்லம் கேட்டபடி கிடைத்ததென்று மகிழுங்கள்

1. கடுகளவு நம்பிக்கையால் கடலையுமே
கல்தரையாய்க் காயச் செய்யலாம்
அணு அளவு நம்பிக்கையால் இமயத்தையும்
ஆழ்கடலில் மூழ்கச் செய்யலாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது - 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்

2. ஒரு வார்த்தை சொன்னாலே போதுமையா
ஒரு குறையும் இல்லாமல் போகுமையா
உனது ஆடை விளிம்பை நான் தொட்டால் போதும்
ஓடிவிடும் உடனடியாய் என் நோய் எல்லாம்
உன்னுடைய நம்பிக்கையே உன்னைக் குணமாக்கியது - 2
என்று சொல்லும் இறைவாக்கை இதயத்திலே சுமந்தவராய்