109. இறைமகன் இயேசுவின் நாமத்திலே
இறைமகன் இயேசுவின் நாமத்திலே
இறைமக்கள் ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம் - 2
ஒரே உடலாகவும் ஒரே உள்ளமாகவும்
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
தியாகத் திருப்பலியில் நமை இணைப்போம்
1. கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து
தன்னை இழந்து பலன் தருதே
திராட்சை குலைகள் கொடியைப் பிரிந்து
தன்னைச் சிதைத்து சுவை தருதே
நானும் அதுபோல் அகந்தை அகற்றி
பிறருடன் இணைந்து பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
2. மண்ணை நனைக்கும் வானத்து மழையே
தன்னை இழக்க பயிர் விளையும்
கிளைகளில் மலர்ந்து காய்க்கும் கனிகள்
தன்னை இழந்து பசி போக்கும்
நானும் அது போல் அன்பில் வளர்ந்து
அயலார் அனைவர்க்கும் பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
இறைமக்கள் ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம் - 2
ஒரே உடலாகவும் ஒரே உள்ளமாகவும்
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
தியாகத் திருப்பலியில் நமை இணைப்போம்
1. கோதுமை மணிகள் மண்ணில் மடிந்து
தன்னை இழந்து பலன் தருதே
திராட்சை குலைகள் கொடியைப் பிரிந்து
தன்னைச் சிதைத்து சுவை தருதே
நானும் அதுபோல் அகந்தை அகற்றி
பிறருடன் இணைந்து பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2
2. மண்ணை நனைக்கும் வானத்து மழையே
தன்னை இழக்க பயிர் விளையும்
கிளைகளில் மலர்ந்து காய்க்கும் கனிகள்
தன்னை இழந்து பசி போக்கும்
நானும் அது போல் அன்பில் வளர்ந்து
அயலார் அனைவர்க்கும் பலன் தருவேன்
இந்தப் பலியினில் இதையே உறுதிசெய்வேன் - 2