முகப்பு


113. இறையாட்சிக் கனவை இகமெல்லாம் நனவாக்க
இறையாட்சிக் கனவை இகமெல்லாம் நனவாக்க
இளமை பொங்கும் உள்ளத்தோடு வருகின்றோம்
இறைவா உம் திருவடியில் ஒரு மனமாய் இணைந்து - 2
இதய வீணை சுரங்கள் பாடி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புகழ்கின்றோம் உம்மைப் புகழ்கின்றோம்
தொழுகின்றோம் தொழுகின்றோம் பணிந்து தொழுகின்றோம்

1. கரை தேடும் உள்ளத்திற்கு ஓடமாகுவோம்
நாங்கள் உறவுகளை ஒன்று சேர்க்கும் பாலமாகுவோம்
நீதி அன்பு உண்மைப் பண்பில் சாட்சியாகுவோம் - 2 நாங்கள்
கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை வாழ்ந்து காட்டுவோம் - 2 புகழ்

2. மனிதர்களை வாழ்விக்கும் அன்பின் வேதங்கள்
நாங்கள் உறவுகளை உயிர்ப்பிக்கும் உண்மை சீடர்கள்
தூய ஆவி கோயிலாகும் புதிய இதயங்கள் - 2 நாங்கள்
கடவுளையே அப்பா என்று அழைக்கும் பிள்ளைகள் - 2 புகழ்