முகப்பு


114. இறைவன் அழைப்பில் வரும் புது உறவு
இறைவன் அழைப்பில் வரும் புது உறவு
இதயம் இறங்கி வரும் இறை உறவு - 2
வானம் திறந்து வரும் வாழ்வுறவு
இங்கு வாரும் இணைவோம் இந்த உறவினிலே
புது வாழ்வு வழங்கும் திருப்பலியினிலே

1. ஓடும் நதிகளைக் கரம் கொண்டுதடுத்தால் நதிகள் நிலைத்திடுமோ
கூவும் குயில்களைக் குடில் கொண்டு அடைத்தால்
கூவ மறந்திடுமோ - 2
பாவ மேகங்கள் உலகினைக் கவர்ந்தால்
பரமன் அன்பு குறைந்திடுமோ - 2
அழைத்திடும் ஆயனின் அன்புக் குரல் கேட்டு
ஆலய பீடம் கூடிடுவோம்

2. எந்த நிலையில் நீ வாழ்ந்திருந்தாலும் ஏற்கும் தந்தையவர்
சொந்த உறவுகள் பிரிந்து சென்றாலும்
தாங்கும் தாயும் அவர் - 2
பந்த பாசம் நிரந்தரம் இல்லை பாச தேவன் மறப்பதில்லை - 2
வாழ்விக்கும் மருந்தை வானக விருந்தைத்
தந்திடும் தேவனை வாழ்த்திடவே