முகப்பு


117. இறைவனில் ஒளிர்ந்திட வாருங்கள் இறைகுலமே
இறைவனில் ஒளிர்ந்திட வாருங்கள் இறைகுலமே
இறையன்பில் மலர்ந்திட இறையரசமைத்திட
கூடுங்கள் திருக்குலமே - 2

1. அன்பிலே நனைந்து பகிர்வில் வளர்ந்திடவே
பகைமை மறந்து அமைதி காத்து
ஒளியில் நடந்திடவே - 2 இந்த
வாழ்வின் பலியினில் கலந்திடுவோம் - நாம்
வாழும் வழிதனைக் கண்டிடுவோம்
இணைவோம் பகிர்வோம் நாம் வாழுவோம்

2. குறைகள் களைந்து மன்னித்து வாழ்ந்திடவே
அடிமை ஒழித்து அநீதி அகற்றி
ஒளியில் நடந்திடவே - 2 இந்தத்
தியாகப் பலியினில் கலந்திடுவோம் - நாம்
தியாக வாழ்வினை வாழ்ந்திடுவோம்
இணைவோம் பகிர்வோம் நாம் வாழுவோம்