118. இறைவனின் ஆட்சியிலே ஓர் குலமாய் வாழ்வோம்
இறைவனின் ஆட்சியிலே ஓர் குலமாய் வாழ்வோம்
இறையன்பினைக் காண இறைபலியில் இணைவோம்
ஆண்டவர் ஆட்சி அகிலமெங்கும்
பரவிட பணிசெய்ய விரைந்திடுவோம்
அவரது வழியில் நடந்திடவே அனைவரும் அர்ப்பணிப்போம்
ஆண்டவர்... ....
அனைவரும் அர்ப்பணித்திடுவோமே
1. அன்பென்பது அறநெறியாகுக ஆறுதல் நம் நெறியாகுக
நீதியென்பது நம் வாழ்வாகுக நேர்மை நம் பேரன்பாக
இறைவிழுமியங்களை வாழ்வாக்குவோம்
இறையாட்சியினை நமதாக்குவோம்
இதையே நாம் இலட்சியமாய் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றார்
2. உண்மை என்பது உறவாகுக உறவில் நாம் ஒன்றாகுவோம்
பகிர்வென்பது நம் பண்பாகுக பாசம் நம் செயலாகுக