124. இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
இறைவனைத் தேடும் இதயங்களே வாருங்கள்
என் இறைவன் யாரென்று சொல்வேன் கேளுங்கள் - 2
1. பாடும் குயிலுக்குப் பாடச் சொல்லித் தந்தவன் யார்
ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லித் தந்தவன் யார் - 2
அவரே என் இறைவன் அவர் தாள் நான் பணிவேன்
அவர் தாள் நான் பணிந்தால் அகமே மகிழ்ந்திருப்பேன்
2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவன் யார்
வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார் - 2
என்னென்ன விந்தைகள் எங்கெங்குக் காண்கிறோம்
அனைத்திற்கும் அடிப்படையில் அவர் தான் காரணம்