முகப்பு


128. இறைவா உம்மைப் புகழ்ந்திடவே
இறைவா உம்மைப் புகழ்ந்திடவே
இறைமக்கள் இணைந்து வருகின்றோம் - 2
தலைவா உம்மில் மகிழ்ந்திடவே - 2
திருப்பலி அருள்பெற விரைகின்றோம்
வாருங்கள் வாருங்கள் அனைவரும் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனைப் பாடுங்கள்

1. ஆலய மணிகள் ஆயனின் குரலென
நம்மை அழைத்தது இறையில்லம் நாம் நுழைவோம் - 2
விரைந்து வருவோம் கரம் சேர்ப்போம்
அவரின் குரலுக்குச் செவிகொடுப்போம் - 2
சுயநலம் அழிந்திட பிறரன்புப் பணி செய்ய
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - நம்
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - வாருங்கள்

2. நலிந்தவர் எழுந்திட தாழ்ந்தவர் உயர்ந்திட
விடுதலை முழங்கிட இறையாட்சி முகிழச் செய்வோம் - 2
மனிதம் உலகில் மலர்ந்திடவே
புனிதன் இயேசுவின் வழி நடப்போம் - 2
காரிருள் மறைந்திடப் பேரொளி பாய்ந்திட
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - நாம்
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - வாருங்கள்