131. உதயம் தேடும் இதயங்கள் உறவில் வளரும் பாதையில்
உதயம் தேடும் இதயங்கள் உறவில் வளரும் பாதையில்
இறையுன் இல்லம் கூடி வருகின்றோம்
புதிய வாழ்வின் கொள்கையாம் மனித மாண்பு பேணிடும்
ஆற்றல் வேண்டி இணைந்து பணிகின்றோம்
வருக வருக மனிதமே இணைக வாழ்வுப் பலியினில்
தலைவன் இயேசு தலைமையில் தகர்ப்போம் தீமை தடைகளை- 2
1. நாம் ஏழைகள் இங்கு நமக்கெங்கே சமத்துவம்
நாம் அடிமைகள் உலகில் நமக்கெங்கே உரிமைகள்
அடிமை வாழ்வு வாழவா இறைவன் மனிதம் படைத்தார்
அந்தக் கோலம் அழிக்கத்தான் தந்தை மகனை அனுப்பினார்
அவர் வாழ்வில் நாம் இணைந்து
புதுயுகத்தின் பணி தொடர்வோம் 2
2. ஏன் பிளவுகள் எங்கும் சுயநலத்தின் அமைப்புகள்
வீண் வாதங்கள் மனிதம் மிதிபடும் நேரங்கள்
உறவில் பிரிந்து வாழவா உயிரை இழக்கத் துணிந்தார்
அன்பு வேதம் மலரத்தான் தனது வாழ்வைப் பகிர்ந்தார் - அவர்..