முகப்பு


132. உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட
உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட
வருவீர் திருக்குலமே - 2
நம்மைத் தாங்கும் தேவனவர் நம் நினைவாய் வாழ்கின்றவர் - 2

1. நிலை தடுமாறுவோர் கால்கள் திடன் அடையும்
நீதி வழிதனில் நடத்திடுவார் - 2
தம்மை நம்புவோரின் சோர்வை நீக்கிடுவார்
சுகம் தந்து உயர்த்திடுவார் - 2
புதுச் சிறகினில் கழுகெனப் பறந்து மகிழ்ந்திட
ஆற்றல் அளித்திடுவார் - 2 நம்மை

2. அன்புக் கயிறுகளால் கட்டிக் காத்திடுவார்
அவர் கரங்களில் சரணடைவோம் - 2
பக்கம் சாய்ந்திடுவார் பசி நீக்கிடுவார்
இனி கவலைகள் நமக்கு இல்லை - 2
நம்மை அறிந்து அன்பு செய்ய ஏங்கும் நெஞ்சம் உண்டு
விரைந்திடு இறைகுலமே - 2 நம்மை