139. ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்
ஒரு குலமாய் ஓரினமாய் வாழ இறைவன் அழைக்கின்றார்
உலகில் சாதி பேதமின்றி ஒன்றி வாழ அழைக்கின்றார் - 2
ஒரு மரம் தோப்பாவதில்லை உலகறிந்த உண்மையே
ஒன்றுபட்டு உழைப்பதாலே உண்டு என்றும் நன்மையே - 2
1. சமுதாய வாழ்வில் நமது ஈடுபாட்டை உணருவோம்
சமய மொழி பண்பாடு தன்னில் சமத்துவத்தை நாட்டுவோம் - 2
நமது அறிவு ஆற்றலோடு நாடும் தொழில் நுட்பமும்
நமது வாழ்வை வளப்படுத்தும் அருட்கொடையாய்க் காட்டுவோம் 2
2. போர் வெறியைத் தூண்டுகின்ற ஆயுதங்கள் ஒழிந்திட
பூரணமாய் அமைதி வாழ்வில் பொழிந்தே உலகம் ஒளிர்ந்திட - 2
பார் முழுதும் இறையரசின் மாண்பு யாவும் மலர்ந்திட
பரமன் அன்பில் மாந்தர் எவரும் பரிவுடனே வாழ்ந்திட - 2