143. கதிரவன் எழும் காலை வேளை
கதிரவன் எழும் காலை வேளை
கருணையின் இறைவனைத் தொழுதிட வாரீர்
உறவின் கரங்கள் ஒன்றாய் இணைந்து
பகிர்வின் பொருளைப் பண்பாய் உணர்ந்து
அன்பிலே உறவிலே நாமும் வாழ கூடுவோம்
1. கலைகளின் ஊற்றாம் கடவுளவர்
கலை சிற்பியாகி நம்மைச் செதுக்கினார்
உயிர்களின் பிறப்பிடம் இறைவனவர்
உயிராவியாகி நம்மில் வாழ்கின்றார்
சாதியும் பேதமும் நமக்கினி வேண்டாம்
சமத்துவம் ஒன்றையே வாழ்விலே காண்போம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும் போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம் - 2
2. அன்னாளில் மோசேயை அழைத்த அவர்
இருகரம் விரித்து நம்மை அழைக்கின்றார்
பெருங்காற்றில் எலியாவை அழைத்த அவர்
பாவச் சுமைகள் களைந்திடவே அழைக்கின்றார்
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
வறியவர் துயரினில் இறைவனை உணர்வோம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும்போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம்
கருணையின் இறைவனைத் தொழுதிட வாரீர்
உறவின் கரங்கள் ஒன்றாய் இணைந்து
பகிர்வின் பொருளைப் பண்பாய் உணர்ந்து
அன்பிலே உறவிலே நாமும் வாழ கூடுவோம்
1. கலைகளின் ஊற்றாம் கடவுளவர்
கலை சிற்பியாகி நம்மைச் செதுக்கினார்
உயிர்களின் பிறப்பிடம் இறைவனவர்
உயிராவியாகி நம்மில் வாழ்கின்றார்
சாதியும் பேதமும் நமக்கினி வேண்டாம்
சமத்துவம் ஒன்றையே வாழ்விலே காண்போம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும் போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம் - 2
2. அன்னாளில் மோசேயை அழைத்த அவர்
இருகரம் விரித்து நம்மை அழைக்கின்றார்
பெருங்காற்றில் எலியாவை அழைத்த அவர்
பாவச் சுமைகள் களைந்திடவே அழைக்கின்றார்
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்
வறியவர் துயரினில் இறைவனை உணர்வோம் - 2
இறைமனித சங்கமம் நிகழ்ந்திடும்போது
இறைவனின் தரிசனம் எல்லோரும் காண்போம்