147. சங்கமம் அன்பின் சங்கமம் சங்கமம் அருளின் சங்கமம்
சங்கமம் அன்பின் சங்கமம் சங்கமம் அருளின் சங்கமம்
சங்கமம் பங்கின் சங்கமம் சங்கமம் பகிர்வின் சங்கமம்
ஆனந்தம் புது ஆனந்தம் தரும் ஆலயம் எங்கள் ஆலயம் - 2
1. விழிகள் திறந்தால் பார்வைத் தெரியும்
பாதைத் தெளிந்தால் பயணம் இனிக்குமே
மனங்கள் திறந்தால் உறவு மலரும்
பகைமை உதிர்ந்தால் பகிர்வு மணக்குமே - 2
அன்பினில் இணைந்து அருளினில் நனைந்து
பங்கினில் நிலைத்து பகிர்வினில் மகிழுவோம் - 2 சங்கமம்
2. ஏக்கங்கள் ஒன்றானால் எழுச்சி ஓங்கும்
தேக்கங்கள் களைந்தால் மாற்றம் பிறக்குமே
எண்ணங்கள் நன்றானால் நம்பிக்கை பெருகும்
அன்புடன் ஒன்றித்தால் எதிலும் வெற்றியே - 2
ஆர்வமாய் இணைந்து ஆக்கமாய் உழைத்து
ஆதிசபை உணர்வில் வாழ்வை வாழுவோம் - 2 சங்கமம்