முகப்பு


152. திருச்சபையாய் உன் பீடம் வந்தோம்
திருச்சபையாய் உன் பீடம் வந்தோம்
உன் பாதம் நாடிவந்தோம்
இறைகுலமாய் கரையில்லா அன்பில் ஒன்றாகக் கூடிவந்தோம்
பிரிவினை அகற்றிட பிறரன்பில் வாழ்ந்திட
உன்னருள் துணையினைத் தேடிவந்தோம்

1. சுமைதாங்கி நீரே எம் நம்பிக்கை நீரே எம் இறைவா
இமைப்பொழுதும் எம்மை விலகாமல் காப்பாய் எம் தலைவா
உந்தன் கரத்தில் சிறுமலராய் - 2 எம்மையும் தாங்கிடுவாய்
வருகிறோம் இணைந்து வருகிறோம்
வரங்களால் நிரம்ப விழைகிறோம்

2. உம்மோடு வாழும் நல்வரமொன்று வேண்டும் எம் இறைவா
இதயங்கள் இணைய புதுவாழ்வு மலரும் எம் தலைவா
உந்தன் அணைப்பில் உள்ளம் மகிழும் - 2
எம் துணை நீரல்லவா - வருகிறோம்