முகப்பு


157. நிலையான நீ வரம் தந்ததால் குலமாகக் கூடி வந்தோம்
நிலையான நீ வரம் தந்ததால் குலமாகக் கூடி வந்தோம்
எம் நெஞ்சத்தில் எழும் நன்றியில் உம் பாதம் சரணாகின்றோம் - 2

1. ஒளியின்றிமலர் எங்கும் மலர்ந்திடுமோ மலராதுமணம்வீசுமோ- 2
நீயின்றிமனங்களும்இணைந்திடுமோஇணையாதுஉறவாகுமோ-2
ஒளியாகி நீ எமைத் தொட்டதால் மலராய் உன் பதம் சேர்கின்றோம்
உறவாகி நீ எமைச் சேர்த்ததால் உனில் இன்று சபையாகின்றோம்

2. மழையின்றிபயிர் நன்குவளர்ந்திடுமோவளராதுபலன் ஈயுமோ- 2
நீயின்றி குறைகளும் விலகிடுமோ விலகாது நிறையாகுமோ - 2
மழையாகி நீ வளம் தந்ததால் பயிராகிப் பலன் தாங்குவோம்
நிறையாகி நீ குறை தீர்த்ததால் மறைவாழ்வின் வழி போகின்றோம்