முகப்பு


159. நீதி தேவன் அழைக்கிறார் வானின் ஆசி அளிக்கிறார்
நீதி தேவன் அழைக்கிறார் வானின் ஆசி அளிக்கிறார்
ஆவியிலும் உண்மையிலும் பலி செலுத்த வாருங்கள்
நம்பித் துணிந்து செயல்பட புதிய வானம் காணலாம் - 2
அன்பில் இறையை வழிபட புதிய பூமி காணலாம் - 2
ஒன்றே எங்கள் தேவன் என்று உரிமைகீதம் பாடுவோம் - 3

1. சுமை சுமந்த தோள்களே சுகம் மறந்த கால்களே
வலி மறந்து வாழ்வு காணலாம் பலியிலே
அருள் நிறைந்த அமைதி காணலாம்
இறையாட்சி விடியலின் புதுக்காட்சி அன்பியம்
மறைவாழ்வின் புனித பண்பியம் நாளுமே
நிறைவாழ்வின் புதிய பயணமே
ஓடும் நதிகள் ஆயிரம் சேரும் கடல் ஒன்று தான்
சாதி மதம் கடந்து நாமும் இறையாட்சியைத் தேடலாம் - 2
மனித நேய சங்கமம் தானே! திருப்பலி
தோழமையின் அன்பியம் தானே - 2

2. பிய்க்கப்படும் அப்பமும் பருகி மகிழும் கிண்ணமும்
இறையாட்சியின் அடையாளமே என்றுமே
இறைகுலத்தின் அடி நாதமே
மடிந்திடாத நெல்மணிகள் உயர்த்திடாது மாந்தரே
பலியில் நாளும் சங்கமிப்போமே நம்மைப்
பகிர்ந்து நாளும் பங்கு வைப்போமே
புத்துலகு வித்துகளாய்ப் புது யுகத்தின் விடியலாய்
ஒன்று கூடி அன்பில் பாடி பலி தருவோம் வாருங்கள் - 2 மனித