முகப்பு


163. புத்தம் புது நாளிலே புதுமைகள் காணவே
புத்தம் புது நாளிலே புதுமைகள் காணவே
இறைமகன் இயேசுவின் பாதத்திலே
இன்பமாய்க் கூடிடுவோம் - 2
கொண்டாடுவோம் பண்பாடுவோம்
தெய்வீகச் சமூகத்தில் அகமகிழ்ந்திடுவோம் - 2

1. அன்பு மனம் கமழும் பலியிதுவே
அருளைப் பொழிந்திடும் பலியிதுவே
வாழ வழி வகுக்கும் நெறி இதுவே
வசந்தம் வாழ்வில் பொங்கும் ஊற்றிதுவே - 2
எல்லோரும் வாருங்கள் ஒன்றாகக் கூடுவோம்
இறைவனைத் தொழுதிடுவோம் - 2
ஒரு மனம் கொண்டு ஒரு குலமாவோம்
பலியில் கலந்திடுவோம் - கொண்டாடுவோம்

2. பாவ இருள் அகற்றும் ஒளி இதுவே
பாசம் காட்டும் அன்புக் கரம் இதுவே
சுமைகள் இறக்கிடும் சுகம் இதுவே
குறைகள் நீக்கிடும் நிறை இதுவே - 2
நீதியும் உண்மையும் அமைதியும் துலங்கிடும்
தூயனைத் தொழுதிடுவோம் - 2 - ஒரு மனம் கொண்டு