165. புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது
புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது
புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது
அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்
ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம் - 2
1. இறைவனின் சொந்தப் பிள்ளைகள் நாம்
இறையரசின் குருத்துவக் குலமும் நாம் - 2
உரிமை வாழ்விலே நமை அழைத்தார் - இந்த
உலகம் வாழவே நமைப் பணித்தார்
உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் - இங்கு
உருகும் விழிகளை நாம் துடைப்போம் - 2
2. தம்மையே இயேசு பலியெனத் தந்து
விடுதலை வாழ்வைத் தந்துள்ளார் - 2
கருணை இறைவனில் நாம் நிலைப்போம் - மனக்
கதவு நிலைகளை நாம் திறப்போம்
கரங்கள் இறைவனின் பலிக்கானால் - இங்குக்
கடவுள் அரசுதான் பிறக்காதோ - 2
புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது
அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்
ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம் - 2
1. இறைவனின் சொந்தப் பிள்ளைகள் நாம்
இறையரசின் குருத்துவக் குலமும் நாம் - 2
உரிமை வாழ்விலே நமை அழைத்தார் - இந்த
உலகம் வாழவே நமைப் பணித்தார்
உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் - இங்கு
உருகும் விழிகளை நாம் துடைப்போம் - 2
2. தம்மையே இயேசு பலியெனத் தந்து
விடுதலை வாழ்வைத் தந்துள்ளார் - 2
கருணை இறைவனில் நாம் நிலைப்போம் - மனக்
கதவு நிலைகளை நாம் திறப்போம்
கரங்கள் இறைவனின் பலிக்கானால் - இங்குக்
கடவுள் அரசுதான் பிறக்காதோ - 2