முகப்பு


169. புனிதநல் பலியினில் கலந்திடுவோம்
புனிதநல் பலியினில் கலந்திடுவோம்
துணிவுடன் இயேசுவின் வழி நடப்போம் - 2
கூடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம்
பகிர்ந்திடுவோம் என்றும் மகிழ்ந்திடுவோம் - 2

1. உறவிலும் தொடர்விலும் தூயவழி தூய்மை அன்பு நமதுமொழி- 2
தரணிக்குத் தேவை நீதி வழி
இணைந்தே நடப்போம் நேய வழி - கூடிடுவோம்

2. இமயமும்குமரியும்இணைந்திடவேஇதயம்உறவில்வளர்ந்திடவே- 2
சாதியும் பேதமும் மறைந்திடவே
சாட்சியாய் வாழ்வோம் யேசு வழி - கூடிடுவோம்