172. மணியோசை ஒன்று மகிழ்வோடு இன்று
மணியோசை ஒன்று மகிழ்வோடு இன்று
நமை வந்து அழைக்கின்றதே
இறை பீடம் நின்று மலர் சூடிக் கொண்டு
இறைவரவில் மகிழ்கின்றதே - 2
எழுந்து வாருங்கள் மகிழ்வைப் பகிர்ந்திடவே
இணைந்து வாழுங்கள் அன்பில் நிலைத்திடவே - 2
1. நான் வாழும் நிலை மாற நாளெல்லாம் உனில் வாழ
நாதா நீ வரம் அளிப்பதால்
காண்கின்ற இடமெல்லாம் கருணா உன் திருவடிவம்
கனிவோடு எனைக் காண்பதால் - 2
பணிவோடு உம் இல்லம் வந்தேன்
பாலா உம் திரு முகம் கண்டேன் - 2
2. திருப்பலியில் நான் இணைய திருவிருந்தை நான் சுவைக்க
தேவா நீ எனை அழைப்பதால்
உம்மோடு உறவாட உம்வழியில் நான்செல்ல
உடனிருந்து உதவுவதால் - 2
உள்ளத்தில் மகிழ்வோடு வந்தேன்
உம்மால்தான் என் வாழ்வைக் கண்டேன் - 2