முகப்பு


174. மாற்றங்கள் நிகழும் மங்களப் பொழுதில்
மாற்றங்கள் நிகழும் மங்களப் பொழுதில்
மனங்களை இணைத்து மன்னனைத் தொழுவோம்
நேற்றைய பகைமை நினைவுகள் மறந்து
நேசங்கள் மகிழ நிறைவினை அடைவோம்
அழைத்தவர் துணையில் ஆறுதல் பெறுவோம்
அச்சங்கள் இல்லை அவர் வழி தனிலே

1. சுயநலச் சுவடுகள் அழித்து சுதந்திரத் தடங்களைப் பதிப்போம்
பயநிலை மனத்தினைப் புதைத்து
பகிர்ந்திடும் உறவினை வளர்ப்போம்
அழுத்தும் நுகத்தடி விலங்குகள் உடைப்போம்
அதுவும் இறைபணி என்பதை உணர்வோம் - 2
ஆலயம் வருவோம் அன்பினில் இணைவோம் - 2
அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே

2. சாவின் விலங்குகள் உடைத்துசாதனை வாழ்வினைக் கொணர்ந்தார்
சரிந்தோர் சரித்திரம் நிமிரும் சருகினுள் சங்கீதம் ஒலிக்கும்
தேய்பிறையொன்றும் முடிவுகள் இல்லை
தெளிவாய்த் தோன்றும் நிலவின் தொடக்கம் - 2
விழுவதால் எழுவோம் விடியலைத் தொடுவோம் - 2
அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே