முகப்பு


175. வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது
வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது
வாருங்கள் இறைகுலமே - நிறை
வாஞ்சை மனத்துடன் விண்ணகத் தேவனை
வழிபட வாருங்களே - 2
இறை அருள் தரும் பலி இது ஆதவன் ஒளி இது
அர்ப்பணமாகிட வாருங்களே திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

1. வறண்ட மணலாய் வாடித்தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது - 2
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது - 2
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2 தினம்
சாட்சியாய்த் திகழ்வோம் திருக்குலமே

2. எங்கும் நிறைந்த தந்தை வழி செல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது - 2
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீகப் பலியிது - 2 மூவொரு