முகப்பு


178. வருக நம் ஆண்டவர் திருமுன்னே
வருக நம் ஆண்டவர் திருமுன்னே
வந்தவர் புகழ்பாடுவோம் மகிழ்வுடனே - 2
நம் மீட்பின் கதியவரே - நற்
பண்ணிசைத்தே நன்றி சொல்வோம் - 2

1. ஆண்டவர் நம் பெரும் இறைவனவர் - எத்
தேவர்க்கும் மேல் பெரும் அரசரவர் - 2
உலகனைத்தும் அவர் கரமே உயர் மலைகளுமே அவர் பொருளே

2. ஆழியும் அவனியும் அவர் படைப்பே - நாம்
தொழுதவர் அடி பணிந்திடுவோம் - 2
ஆயன் அவர் இறையும் அவர் அவர் மந்தையின் ஆடுகள் நாம்