188. விடியல் ஏந்தும் தீபங்கள் தலைவன் இயேசு சீடர்கள்
விடியல் ஏந்தும் தீபங்கள் தலைவன் இயேசு சீடர்கள்
ஓருடலாய் மாறும் தூய பலியிது - 2
தியாக நினைவினை வாழும் வழியிது
வாழ்வின் பொருளினை உணரும் மொழியிது
இணைந்திட இறைவன் இல்லம் அழைக்குது
கடலில் கரையும் நதிகள் நாம்
கொடியில் இணையும் கிளைகள் நாம்
இறைவன் அரசின் கனவுடன் இனிதாய் இணைவோம் - 2
1. ஒரே ஆவி பொழிவதால் ஒரே அழைப்பு பெறுவதால்
ஒரே தந்தை பிள்ளையாக மாறும் நாளிது
ஒரே பலியில் இணைவதால் ஒரே உணவைப் பகிர்வதால்
ஒரே குடும்பம் உலகம் என்று மகிழும் நாளிது
ஒரே உள்ளம் தருவதால் ஒரே எண்ணம் எழுவதால்
நெஞ்சமே கோவிலாக மலருது - 2
மண்ணிலே இறைவன் பாதம் தெரியுது
2. ஒரே ஆயன் அழைத்ததால் ஒரே மந்தை ஆனதால்
ஒரே மாண்பு உன்னில் என்னில் உணர்வு சொல்லுது
ஒரே வார்த்தை கேட்பதால் ஒரே இரத்தம் மீட்பதால்
ஒரே பணியில் இணையும் கைகள் உலகை வெல்லுது
ஒரே அன்பில் உறைவதால் ஒரே அமைதி நிறைவதால்
வெள்ளமாய் நீதி மண்ணில் வழியுது - 2
விண்ணகம் ஆசி நம்மில் பொழியுது