முகப்பு


194. அருமை அருமை வான்படைகளின்
அருமை அருமை வான்படைகளின்
இறைவன் வாழும் இல்லம் அருமை - 2

1. அழகு முற்றங்கள் அங்கு ஆயிரம் உண்டு
அத்தனையும் காண அருமை
தங்குது அங்கே சின்ன சின்ன குருவிகள்
ஏங்குது மனமே அதைக் கண்டு - 2
எந்த நேரமும் அந்தக் குருவிபோல் - உன்
சன்னிதி வாழும் அருள் நிலையே வேண்டும் - 2
எனது ஆத்மா கொண்ட தாகம் தாகம் இது

2. ஆவல் கொள்கிறேன் உன் அழகு வாயிலில்
காவல் காக்கவே தினமும் அருமை
அரண்மனை வாழ்க்கை ஆயிரம் நாளானாலும்
ஆலயத்தில் ஒருநாள் போல் இல்லை - 2
எந்த நேரமும் அந்தக் குருவிபோல் - உன்
சன்னிதி வாழும் - அருள் நிலையே வேண்டும் - 2
எனது ஆத்மா கொண்ட தாகம் தாகம் இது