முகப்பு


197. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

1. ஆண்டவரை நான் எக்காலமும் போற்றிடுவேன் போற்றிடுவேன்
அவரது புகழ் எப்பொழுதும் எனது நாவில் ஒலித்திடுமே
நான் ஆண்டவரைப் பெருமையாகப் பேசுவேன் - 2
எளியோர் இதைக்கேட்டு அகமகிழ்வர் மகிழ்ச்சி கொள்வர்

2. என்னோடு ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்
அவரது பெயரை மேன்மைப் படுத்துவோம்
நான் துணை வேண்டி ஆண்டவரை மன்றாடினேன் - 2
அவர் எனக்கு மறுமொழி தந்தார் மறுமொழி தந்தார்