முகப்பு


198. ஆண்டவர் எவ்வளவு நல்லவர் அவரை அணுகி வாருங்கள்
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் அவரை அணுகி வாருங்கள்
ஆண்டவர் எவ்வளவு இனியவர் அவரைச் சுவைத்துப் பாருங்கள்

1. பாவமெதுவும் செய்தவரல்லர் வாயில் வஞ்சகம் வந்ததில்லை
பழித்தவரைப் பழித்ததில்லை பாடுகளில் மிரட்டவில்லை

2. சிலுவைதனில் தம்முடலால் இயேசு நம் பாவங்களைச் சுமந்தாரே
அவருடைய காயங்களால் நாமெல்லாம் சுகமானோம்

3. பாவிகள் நம்மை நேசிக்கின்றார் - நம்
பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கின்றார்
தந்தையாக அணைக்கின்றார் புதுவாழ்வு தருகின்றார்