முகப்பு


200. ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
ஆண்டவர் என் ஆயனாக இருக்கிறார் இனி
எனக்குக் குறைகள் ஒன்றும் இல்லையே
தேவன் நிழலிலே நிதமும் நிம்மதி
தலைவன் பாதையில் செல்லும் என் வழி
ஆண்டவர் என் ஆயனாக இருப்பதால் ஆ

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கிறார்
இனிய நீர்நிலைக்கு அழைத்துச் செல்கிறார் - 2
துணையாகி வழியாகி உடன் நடக்கிறார்
உயிராகி என்னைக் காக்கிறார் எல்லாம் எனக்கு ஆயன் அவரே

2. இருளின் பாதையில் நான் நடக்க நேரிடினும்
தீமைகள் எதற்குமே அச்சமில்லையே - 2
அவர் கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதல் - 2
அவரே என் அருகிருப்பதால் எல்லாம் எனக்கு ஆயன் அவரே