முகப்பு


202.ஆண்டவர் எனது நல்லாயன்
ஆண்டவர் எனது நல்லாயன்
ஆகவே எனக்குக் குறையுமிறாது - 2

1. பசும்புல் வெளிமீது இனைப்பாற்றுவார் - எனை
குளிர் நீர் நிலைக்கு அழைத்துச் செல்வார்
புத்துயிர் எனக்கு அவர் அளிப்பார் - எனை
நீதியின் வழியில் நடத்திடுவார்

2. பகைவர் கண்முன்னே விருந்தளித்தீர்
நறுமணத் தைலத்தால் எனைப்பூசினிர்
அருளும் அன்பும் சூழ்ந்து வரும் - நான்
உமது இல்லத்தில் வாழ்ந்திருப்பேன்