முகப்பு


203. ஆண்டவர் தந்த நாள்களிலெல்லாம்
ஆண்டவர் தந்த நாள்களிலெல்லாம்
வெற்றியின் நாள் இதுவே - இன்று
அகமகிழ்வுடனே அக்களிப்போம் - அது
நீதியும் தகுதியாகும் எனவே மகிழ்ந்து பாடிடுவோம்
இறைவன் நீரே இருப்பவர் நீரே இருளைப் போக்கும் ஒளியும் நீரே
வாழ்வும் நீரே வழியும் நீரே வாழ்வின் உணவாய் வந்தவர் நீரே

1. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
என்றென்றும் உள்ளது அவர் பேரன்பென்று
அவருக்கஞ்சுவோர் சாற்றுவாராக
ஆற்றலாய்த் துணை நிற்கும் வல்லவரே அவர்
அவரைப் போற்றிடுவோம் - 2 நாம் அவரில் நிறைவடைவோம்

2. என் துன்ப வேளையில் அவரை வேண்டினேன்
அவரும் செவி தந்து விடுவித்தார்
எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் இருக்க
யாருக்கு நான் நடுங்க வேண்டும்
என் மன்றாட்டை நீர் கேட்டதால் இறைவா
வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் - 2 உமக்கு
வாழ்வாலே நன்றி சொல்வேன்